பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை!-சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்களில் நம்பகத்தன்மை இல்லை!- வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவிக்கின்றேன்!-லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ்.

இன்று (30.09.2020) நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு எல்.கே. அத்வானி.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரமில்லை என்றும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரத்துடன் சி.பி.ஐ., நிரூபிக்கவில்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்கவில்லை என்றும், அவர்கள் தான் மசூதியை இடிக்கவிடாமல் தடுத்தனர் என்றும், சிபிஐ வழங்கிய ஒலி மற்றும் ஒளி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை என்றும், சிபிஐ வழங்கிய பல்வேறு ஆதாரங்களில் ஒளிப்பதிவு தெளிவாக இல்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தான் இடிக்க தூண்டினார்கள் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், சதிச்செயல் நடந்தததாக கூறுவதை ஆதாத்துடன் நிரூபிக்கவில்லை என்றும், சமூக விரோத கும்பல் தான் மசூதியை இடித்தது என்றும், இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்பில்லை என்றும், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தனது தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (30.09.2020) நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு எல்.கே. அத்வானி.

இன்று (30.09.2020) காலை முதல் எல்.கே. அத்வானி வீட்டிற்கு வெளியே காத்திருத்த வீடியோ கேமராக்கள்.

நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்!-நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.

ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் பட்டப் பகலில் இடித்து நொறுக்கினார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அழிவுச் செயல். உச்சநீதிமன்றமும், திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்றுதான் குறிப்பிட்டது.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும். நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்றுதான் கூறும்.
-வைகோ,
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
30.09.2020

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்!-விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

-வீடியோ மற்றும் படங்கள்: UTL MEDIA TEAM.

Leave a Reply