கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.

FILE PHOTO.

Prime Minister, Shri Narendra Modi launched a public movement today and appealed everyone to unite in the fight against corona.

In a tweet, the Prime Minister appealed everyone to unite in the fight against Corona. Reiterating the key message of “wear a mask, wash hands, follow social distancing and practice do gaj ki doori”, the Prime Minister said together we will succeed and win against the Covid-19.

The campaign is being launched with the aim to encourage People’s Participation. Under the campaign, a COVID-19 Pledge will be taken by all. A Concerted Action Plan will be implemented by Central Government Ministries/ Departments and State Governments/ Union Territories with the following highlights:

  •     Region- specific targeted communication in high case-load districts.
  •   Simple and easily understandable messages to reach every citizen
  •   Dissemination throughout the country using all media platforms
  •  Banners and Posters at public places; involving Frontline workers and Targeting Beneficiaries of Government Schemes
  •  Hoardings/ wall paintings/ electronic display boards in government premises
  •  Involvement of Local and National influencers to drive home the message
  •  Running mobile vans for regular awareness generation
  • Audio messages; pamphlets/ brochures on awareness
  • Seeking support of Local Cable Operators for running COVID messages
  • Coordinated media campaign across platforms for effective outreach and impact

Let us always remember:

Wear a mask.

Wash hands

.Follow social distancing.

Practice ‘Do Gaj Ki Doori.’

Together, we will succeed.

Together, we will win against COVID-19.

பிரதமர் நரேந்திர மோதி கொரோனாவுக்கு(covid-19) எதிரான மக்கள் இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். கொரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். ‘‘முக கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், 6 அடி தூரம் நடைமுறையை பின்பற்ற வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ள பிரதமர், நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம், கொரோனாவை வெல்வோம் என கூறியுள்ளார்.

மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரத்தின் கீழ் கொரோனாவுக்கு(covid-19) உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்படும்.

ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டம் பின்வரும் சிறப்பம்சங்களுடன், மத்திய அமைச்சகங்கள் / அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களால் அமல்படுத்தப்படும்:

  • அதிக பாதிப்புள்ளள மாவட்டங்களில், குறிப்பிட்ட இலக்குடன் தகவல் தொடர்பு.
  • ஒவ்வொருவரையும் சென்றடையும் வகையில் எளிமையான, புரிந்து கொள்ளக்கூடிய தகவல்கள்
  • நாட்டில் உள்ள அனைத்து ஊடக தளங்கள் மூலமாக தகவல் பரப்புதல்
  • பொது இடங்களில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள்; முன்னணி தொழிலாளர்களை ஈடுபடுத்துவது, அரசு திட்டங்களின் பயனாளிகளை குறிவைத்து பிரசாரம் செய்வது
  • கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு அலுவலக வளாகங்களில், பேனர்கள், சுவர் விளம்பரங்கள், எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகைகளை பயன்படுத்துவது
  • தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, உள்ளூர் மற்றும் தேசிய பிரபலங்களை ஈடுபடுத்துவது
  • வழக்கமான பிரசாரத்துக்கு, வேன்களைப் பயன்படுத்துதல்
  • விழிப்புணர்வு பற்றிய ஆடியோ தகவல்கள்; துண்டு பிரசுரங்கள்/ கையேடுகள்
  • கொரோனா தகவல்களை ஒளிபரப்ப, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் உதவியை நாடுதல்
  • தகவல்கள் மக்களை சென்றடைந்து, நல்ல பயனை ஏற்படுத்த ஊடக தளங்களில் ஒருங்கிணைந்த பிரசாரம்.

டிவிட்டரில் பிரதமர் மோதி வெளியிட்டுள்ள பிரசாரம்:

இதனை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்:

முகமூடி அணியவும்.

கைகளைக் கழுவவும்.

சமூக இடைவெளியை பின்பற்றவும்.

‘6 அடி தூர இடைவெளியை’ பின்பற்றவும்.

ஒன்றாக இணைந்து, நாம் வெற்றி பெறுவோம்.

ஒன்றாக இணைந்து , நாம் கொரோனாவை வெல்வோம்.

Protective-measures-Eng

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN October 13, 2020 7:17 pm

Leave a Reply