நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்!-சப்தமில்லாமல் யுத்தம் செய்யும் முருகன்.

PR_PJ-_12-10-2020

காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த பிரபல நடிகை குஷ்பு, அக்கட்சியிலிருந்து விலகி, டெல்லி சென்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசிய பின்னர், பா.ஜ.க தேசிய செயலாளர் ரவி முன்னிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அப்போது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார்.

எல்.முருகன்.

வாய் சவடால் அதிகம் பேசும் நபர்கள் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியில், சப்தமில்லாமல் யுத்தம் செய்து வரும் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் செயல்பாடு, உண்மையிலுமே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

வீடியோ மற்றும் படங்கள்: UTL MEDIA TEAM.

Leave a Reply