தமிழ்நாடு, மகாராஷ்டிரா விவசாயிகளிடமிருந்து வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு… போன்ற பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கேரளா அரசு முயற்சி!

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்.

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா விவசாயிகளிடமிருந்து வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு… போன்ற காய்கறி பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து சேமிக்கும் முயற்சியில் கேரளா அரசு தற்போது இறங்கியுள்ளது. மேலும், விவசாயப் பொருட்களைக் கையாளும் நிறுவனங்கள், கேரள ஏஜென்சிகள் மூலம் இப்பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஆகியோரின் உதவியை கேரளா அரசு நாடியுள்ளது.

இதுக்குறித்து இன்று (26 அக்டோபர்) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

சப்ளை-கோ, ஹார்டிகார்ப் மற்றும் நுகர்வோர் ஃபெட் போன்ற ஏஜென்சிகள் மூலம் விவசாயிகளிடமிருந்து பொருட்களை சேமித்து வைக்க வசதிகள் வேண்டும் என, தமது கடிதத்தில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். வெங்காயம் விலை உயரும்போது சந்தையை கட்டுப்படுத்த நேரடி சேமிப்பு தேவை என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த விலைகளைப் பெற முடியும் என, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply