மத்திய தகவல் ஆணையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பதவியேற்பு விழாவில் ஹீரலால் சமரியா, திருமதி.சரோஜ் புன்ஹானி மற்றும் உதய் மஹூர்கர் ஆகியோருக்கு தகவல் ஆணையர்களாக, மத்திய தலைமை தகவல் ஆணையர் ஒய்.கே.சின்ஹா இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதன் மூலம் தலைமை தகவல் ஆணையர் உட்பட மொத்த தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை மத்திய தகவல் ஆணையத்தில் 8 ஆக உயர்ந்துள்ளது.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த ஹீரலால் சமாரியா, ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். சிவில் இன்ஜினியரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
மத்திய தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையராக சேருவதற்கு முன்பு திருமதி.சரோஜ் புன்ஹானி ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர் மனிதநேயத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
மூத்த பத்திரிகையாளரான உதய் மஹூர்கர், மத்திய தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையராக சேருவதற்கு முன்பு, ஒரு முன்னணி ஊடக நிறுவனத்தில் மூத்த துணை ஆசிரியராக செயல்பட்டு வந்தார். மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறையில் பட்டம் பெற்றவர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com