இந்திய குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மிக மிக முக்கியமான நபர்களின் (Very Very Important Person (V V.I.P.) பயணங்களுக்காக, அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட புதிய போயிங் 777 ரக அதிநவீன சொகுசு விமானத்தில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் பயணத்தை அவரது மனைவியுடன் இன்று (24.11.2020) தொடங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிநவீன சொகுசு விமானத்தில் இன்று ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வ பூஷன் ஹரிச்சந்திரன், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன், மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதற்கு முன்னதாக டெல்லியில் இருந்து சென்னை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
-எஸ் சதிஸ் சர்மா, சி.கார்த்திகேயன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com