பொது இடங்களில் புத்தாண்டு விழா கொண்டாட தமிழக அரசு தடை!-காவல்துறை மூலம் எச்சரிக்கை.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், பொது இடங்களில் புத்தாண்டு விழா கொண்டாட காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலம் என்பதால், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் ஏற்காட்டில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாடுவர். அது மட்டுமின்றி, ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்நிலையில், கொரோனா முற்றிலும் அழியாததாலும், புதிய வகை கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளதாலும், ஏற்காட்டில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடவும், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும், தங்கும் விடுதியில் தங்கியுள்ள நபர்கள் இரவு 9 மணிக்கு மேல் பொது இடங்களில் கூடுவதற்கும், ஏற்காடு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கபோவதாக காவல் ஆய்வாளர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தங்கும் விடுதிகளுக்கும், பொதுமக்களுக்கும் வினியோகித்தனர்.

நே.நவீன் குமார்.

Leave a Reply