வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்!-கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உண்மை நகல்.

கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட கேரள ஆளுநருக்கு கேரள அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் செயலுக்கு ஆளும் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. பின்னர் 2-வது முறையாக கேரள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கேரள ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதனை அடுத்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கேரள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (31.12.2020) கூட்டப்பட்டது.

கேரள சட்டப் பேரவை.

கேரள முதல்வர் பினராயி விஜயன்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய பினராயி விஜயன் ‘‘புதிய வேளாண் சட்டங்களால் கேரளாவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. உணவுப் பொருட்களுக்கு முழுக்க முழுக்க மற்ற மாநிலங்களையே கேரளா நம்பியுள்ளது. வேளாண் சட்டங்களால் உற்பத்தி மாநிலங்கள் பாதிக்கப்படும் போது அதன் மறைமுக பாதிப்பு கேரளாவிலும் இருக்கும்.’’ எனக் கூறினார்.

கேரள மாநில சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வந்த தீர்மானத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவுசெய்துள்ளோம்.

AGENDA-31.12.2020

Resolution-118

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply