டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசியல் விரிவாக்கத்தை இந்தியா முழுவதும் முன்னெடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி அறிவித்தது. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். மேலும், 504 வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் ஆம் ஆத்மி கட்சி அதிரடியாக நேற்று (03.01.2021) அறிவித்துள்ளது.
குஜராத் உள்ளாட்சி தேர்தல்!- ஆம் ஆத்மி வேட்பாளர்களின் முதல் பட்டியல்.
எதிர் வரும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளதுடன், குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு ஒரு வலுவான மாற்றாக, ஆம் ஆத்மி கட்சி செயல்படும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. இது குஜராத் மாநில ஆளும் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ-வும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அதிஷி தலைமையில் நேற்று நடைப்பெற்ற பேரணியை தடுத்து நிறுத்த, காவல்துறையும் மற்றும் பாஜகவினரும் முயற்சி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com