கனிமொழியை தடுத்து நிறுத்திய காவல் துறை!-போராட்டத்தில் குதித்த திமுக-வினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்படைய அனைத்து நபர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, திமுக மகளிர் அணி சார்பில், அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கோயம்புத்துர் விமான நிலையத்தில் இருந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த கனிமொழியின் காரை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.அங்கு காவல் துறையினர்க்கும்,திமுக -வினருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கனிமொழி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர

அதன் பின்னர் காவல் துறையினரின் தடையை மீறி, பொள்ளாச்சி சென்று போராட்டத்தில் கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பொள்ளாச்சிக்குச் செல்லும் வழியில் நான் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டு நிறுத்தப்பட்டேன். இந்த கொடூரமான குற்றத்தை மூடிமறைப்பதற்காக தங்கள் மூத்த தலைவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று அவர்கள் கவலைப்படுகிறார்களா? அவர்கள் நிரபராதிகள் என்றால் அரசு ஏன் பயப்படுகிறது?

இவ்வாறு கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன், எஸ்.திவ்யா
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply