ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், இராமநாதபுரம் மாவட்ட இணைச்செயலாளர் ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு, மாநில விவசாய அணி துணைத்தலைவர் தே.மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply