புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்ட மன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் வி.நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், ‘தான் பதவி விலகப்போவதில்லை’ என்று முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஏற்கனவே திட்டமிட்டபடி ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் நேற்றிரவு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று (பிப்ரவரி 17) புதுச்சேரி வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘கடற்கரையில் ஓர் கலந்துரையாடல்..!’ என்ற தலைப்பில் முத்தியால்பேட்டை மற்றும் பாப்பம்மாள்கோவில் மீனவ சமுதாய மக்கள் மத்தியில் ராகுல்காந்தி உரையாடினார்.
முன்னதாக டெல்லியில் இருந்து இன்று (பிப்ரவரி 17) சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளித்தனர்.
மேலும், புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
இன்று (பிப்ரவரி 17) மாலை புதுச்சேரி முதலியார்பேட்டையில் நடைப்பெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி உரையாற்றினார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com