மத்திய அரசு மூலம் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களை, பாஜக கட்சி எம்எல்ஏக்கள் என்று ஆளுநர் குறிப்பிடலமா?!-குழப்பத்தில் இருக்கும் புதுச்சேரி அரசியல் மற்றும் ஆட்சி நிலவரம்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்ட மன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் வி.நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், ‘தான் பதவி விலகப்போவதில்லை’ என்று முதல்வர் வி.நாராயணசாமி கூறி வருகிறார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நேற்று (பிப்ரவரி 18) காலை பதவியேற்றுக்கொண்ட மருத்துவர். தமிழிசை சௌந்தரராஜன், நேற்று (பிப்ரவரி 18) மாலையே முதல்வர் வி.நாராயணசாமியை, ஆளுநர் மாளிகைக்கு நேரில் வரவழைத்து, ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் 14 பேரும், எதிர்க்கட்சி தரப்பில் 14 பேரும் உள்ளதால், பிப்ரவரி 22-ந்தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கடிதம் வழங்கினார்.

20210218131649821885864

காங்கிரஸ் எம்எல்ஏக்கள்-10, திமுக எம்எல்ஏக்கள்-3, ஒரு சுயேச்சை என மக்களால் தேர்வு செய்யப்பட்ட 14 பேர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருகின்றனர். எதிர் தரப்பில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள்-7, அதிமுக எம்எல்ஏக்கள்-4 பேர் என மக்களால் தேர்வு செய்யப்பட்ட 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஆனால், ஆளுநர் வழங்கியுள்ள அந்த உத்தரவில் மத்திய அரசு நியமித்த 3 எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்கு உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை உள்ளதாக முதல்வர் வி.நாராயணசாமி கூறி வருகிறார்.

மத்திய பிரதேசத்தில் நடைப்பெற்ற இதுப்போன்ற ஒரு பிரச்சனையில், கடந்த (2020) ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கீழ்காணும் தீர்ப்புரையை கவனமாக படித்தால், தற்போது புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

9689_2020_32_1502_21597_Judgement_13-Apr-2020

எது எப்படியோ முதல்வர் வி.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தற்போது கவிழ்ப்பதாலோ, கலைப்பதாலோ (அல்லது) அவரை ஆட்சிப்பொறுப்பில் இருந்து அகற்றுவதாலோ, புதுச்சேரியில் அரசியல் ரீதியாக பாஜகவுக்கு எந்த நன்மையும் நடக்க வாய்ப்பில்லை. அப்படி செய்தால் அது வி.நாராயணசாமிக்கு மக்களிடம் அனுதாபத்தைதான் பெற்று தரும். பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதையாகதான் அது முடியும்.

சரி, அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply