நாட்டில் பெட்ரால் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். இதுகுறித்து மாநிலங்களவையில் உடனே விவாதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதற்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி தொடர்ந்து கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, அவை நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com