குருவிகளுக்கு கூடு அமைக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்துவரும் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி ஆளுநர் மாளிகை (Raj Nivas Gardens) தோட்டத்தில் சிட்டுக் குருவி உள்பட சிறிய ரக குருவிகள் சுற்றித்திரிவதைப் பார்த்து, அவற்றின் இனவிருத்திக்காகவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், குறைந்த விலையில் சிறிய கூடுகளை மரங்களில் பதித்து வருகிறார்.

இப்பணியில் ஆளுநரின் சிறப்புச் செயலாளர் எஸ்.டி.சுந்தரேசன், ஆளுநரின் ஆலோசகர்கள் டாக்டர் சி.சந்திரமௌலி, டாக்டர் ஏ.பி. மகேஸ்வரி ஆகியோர் இன்று ஈடுப்பட்டனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜனின் இம்மகத்தான முயற்சி உண்மையிலுமே பாராட்டத்தக்கது.

இதைப் பார்க்கும்போது;

காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை

-என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது.

தமிழக பாஜக தலைவராக மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இருந்தவரை, தமிழக அரசியலில் பரபரப்பிற்கு என்றுமே பஞ்சமிருக்காது; எதிரிகளின் விமர்சனங்களை கண்டு அஞ்சாமல், சமூக ஊடகங்களில் வந்த கேலி, கிண்டல்களை எல்லாம் பொருட்படுத்தாமல், தனி ஒரு மனுசியாக இருந்து, மொத்தக் கூட்டத்திற்கும் பதிலடிக் கொடுத்து, மிகவும் துடிப்புடன் செயல்பட்டார். கடின உழைப்புக்கு சொந்தகாரர் என்ற பெருமை அவருக்கு எப்போதுமே உண்டு.

அதற்கான உரிய அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் பாஜக தலைமை அவருக்கு வழங்கியிருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காக பாஜக தலைமையை நிச்சயம் நாம் பாராட்டத்தான் வேண்டும்.

திறமையும், உழைப்பும் இருந்தால் ஒரு சாமானியன் கூட உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்பதற்கு, மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் மிக சிறந்த உதாரணம்.

Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply