மும்பை ‘சன்ரைஸ்’ மருத்துவமனை தீ விபத்தில் பலியான வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி!

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை, பாண்டுப் ட்ரீம் (மால்) வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, வணிக வளாகத்தின் மேல்தளத்தில் செயல்பட்டு வந்த ‘சன்ரைஸ்’ மருத்துவமனையில் தீ பரவியது. இதனால் இங்கு சிகிச்சைப் பெற்று வந்த ‘கொரோனா’ நோயாளிகள் தீயில் சிக்கி பலபேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த தீ விபத்தில் பலியானவர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என, சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

– மும்பை குணால்.

Leave a Reply