பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மனைவிக்கு சொந்தமான காரில் வாக்கு பதிவு இயந்திரம்! -அசாம் மாநிலத்தில் நடந்த அநியாயம்!-இதோ அதற்கான ஆதாரம்.

KRISHNENDU PAUL, PATHARKANDI MLA, Bharatiya Janata Party.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அசாம் மாநிலம், பதர்கண்டி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு கிருஷ்ணேந்து பால் என்பவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், அதே பதர்கண்டி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் தற்போது கிருஷ்ணேந்து பால் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

அசாமில் இரண்டாம் கட்ட பொதுத் தேர்தல் நேற்று (01.04.2021) நடந்து முடிந்த சில மணி நேரங்களில், கரீம்கஞ்ச் மாவட்டம், கனிசெயில் பகுதியில் AS 10B 0022 என்ற வெள்ளை நிற ‘மஹிந்திரா பொலிரோகாரில் வாக்கு இயந்திரம் இருப்பதை கண்டனர்.

இந்த கார் அசாம் மாநிலம் பதர்கண்டி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் கிருஷ்ணேந்து பால் என்பவரின் மனைவி மதுமிதா பால் என்பவர் பெயரில் கரீம்கஞ்ச் (Karimganj) வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) பதிவாகியுள்ளது.

இதோ அதற்கான ஆதாரம்:

மேலும், தற்போது பதர்கண்டி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிடும் கிருஷ்ணேந்து பால் AS 10B 0022 பதிவு எண் கொண்ட ‘பொலிரோ கார்’ தனது மனைவி மதுமிதா பால் பெயரில் உள்ளதாக தனது வேட்புமனு உறுதிமொழி பத்திரத்தில் பக்கம் 11 -ல் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அதற்கான ஆதாரம்:

Affidavit-1617365421

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் -Electronic Voting Machine (EVM) குறித்து, பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் நாடுமுழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் இச்சூழ்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது?!

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply