வாக்கு பதிவு விபரமும்!-வன்முறை வெறியாட்டமும்..!-மேற்கு வங்க மாநில கள நிலவரம்!-முழு விபரம்.

மேற்கு வங்க மாநிலத்தில் 44 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 15,940 வாக்குச் சாவடிகளில் இன்று (10.04.2021) நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், இன்று பல வாக்குச் சாவடிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் நாட்டு வெடிகுண்டு வீச்சு என்று வன்முறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடியது.

வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட முதல் முறை வாக்காளர் ஆனந்த் என்பவரின் பெற்றோர்.

இந்நிலையில், கூச் பெஹர் மாவட்டத்தில் உள்ள சிதால்குர்ச்சி (தனி) சட்டமன்ற தொகுதியில், பாஜக ஆதரவாளர் ஆனந்த் என்ற முதல் முறை வாக்காளர், வாக்கு சாவடியில் வாக்களிக்க நின்ற போது, வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாஜக தொண்டர்களும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

இந்த பயங்கர மோதலை அடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மணிருஜ்ஜமான் (வயது 28), ரூ ஹமீதுல் (வயது 30), நூர் ஆலம் மியா (வயது 21), சாமி உல் ஹக் (வயது 20) ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர்; மேலும், மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இதுக்குறித்து மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

வாக்குச் சாவடி ஊழியர்களை வன்முறை கும்பல் தாக்கியது, அதனால்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என்று கூச் பெஹார் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் தேபாஷிஷ் தார் IPS கூறினார்.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் குறித்து விரிவான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும்; சிறப்பு பார்வையாளர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், பிரச்சனைக்குரிய இந்த தொகுதியின் வாக்கெடுப்பை ஒத்திவைப்பதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

PN-46_10042021

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN April 10, 2021 11:09 pm

Leave a Reply