மஹாராஷ்டிர மாநிலம், மும்பை நகரத்திற்கு வடக்கே, கடற்கரை நகரம் என்று அழைக்கப்படும் வசாய்-விரார் நகரத்தில் அமைந்துள்ள விஜய் வல்லப் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில், இன்று (23.04.2021) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் (Intensive care unit (ICU) சிகிச்சைப் பெற்று வந்த 13 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பல நோயாளிகள் காயமடைந்தனர். இதனால் இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நாசிக் நகரத்தில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவின் விளைவாக, நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனதால் 24 கொரானோ நோயாளிகள் 21.04.2021 அன்று உயிரிழந்தனர். அந்த துயரச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள், மற்றொரு மருத்துவமனையில் இன்று நடந்த தீ விபத்தில் 13 கொரோனா நோயாளிகள் பலியாகியிருப்பது உண்மையிலுமே கவலை அளிக்கிறது.
அது எப்படி? கொரோனா நோயாளிகள் சிகிச்சை பிரிவில் மட்டும் இதுப்போன்ற சம்பவம் தொடர்ந்து நடக்கிறது?! இந்த தொடர் மர்மங்களுக்கு, மஹாராஷ்டிர மாநில அரசு நிர்வாகதான் விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும்.
-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத் தொடர்பான முந்தையச் செய்திக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
இந்த நிகழ்ச்சி வேதனை அழிக்கிறது…..