55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி வழங்க கூடாது!-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளுக்கு கட்டுப்பாடு.

File Photo.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளுக்கான கொரோனா தடுப்பு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி வழங்க கூடாது.

சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் காச்சல் உள்ளவர்களுக்கு பணி வழங்க கூடாது.

சர்க்கரை மற்றும் இருதய நோயாளிகள், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு பணி வழங்க கூடாது.

பணியின் போது சமூக இடவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கூட்டமாக சேர்ந்து பணி செய்யக் கூடாது.

குறைந்தது இரண்டு மீட்டர் இடவெளியில், முக கவசம் அணிந்து பணி செய்ய வேண்டும்.

பணி செய்யும் அனைவருக்கும் சோப்பு (அல்லது) கையை சுத்தம் செய்தற்கான கிரிமி நாசினி திரவம் வழங்க வேண்டும்.

பணி செய்யும் நபர்கள் வெற்றிலை பாக்கு மற்றும் புகையிலை பயன்படுத்தக் கூடாது.

யாருக்காவது சளி, இருமல், மூக்கடைப்பு, சுவாசக் கோளாறு மற்றும் காச்சல் இருந்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் (அல்லது) அரசு மருத்துவமனைக்கு சென்று உடனே கொரோனா பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.

பணி செய்யும் நபர்கள் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை தனித் தனியாக கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும். ஒருவர் பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

யாருக்காவது கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, அத்தகவலை சுகாதாரத் துறைக்கும், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு உடனே தெரிவிக்க வேண்டும்.

45 வயதிற்கு மேற்பட்டவர்களை, அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி ஆலோசனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply