கொரோனா நோய் தொற்று குறித்து உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோயாளிகள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விவரங்கள்!-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விளக்கம்.

இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா?

இல்லை, மற்றவர்களை விட இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இல்லை.

மேற்கண்ட நோய்கள் உடையவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால், உடல் மிக மோசமடைவது அல்லது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதா?

கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பெரும்பாலானோருக்கு(80%) சுவாச பாதிப்பு ( காய்ச்சல், தொண்டை வறட்சி, இருமல்) போன்ற மிதமான அறிகுறிகள் ஏற்பட்டு முழுவதும் குணமடைகின்றனர். நீரிழிவு, இதய பலவீனம் உட்பட இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம். ஆகையால், இதுபோன்ற நோயாளிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

நீரிழிவு உள்ளவர்கள், கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதா?

பொதுவாக, கட்டுப்பாடற்ற நீரழிவு உள்ளவர்களுக்கு அனைத்து வகையான தொற்றும் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த தொற்று ஏற்படும் அதிக அபாயம் இல்லை. சிலருக்கு தொற்று ஏற்பட்டால், கடுமையான பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், நீங்கள் உங்கள் உணவு, வழக்கமான உடற்பயிற்சியை முடிந்தளவு பின்பற்ற வேண்டும், உங்கள் மருந்துகளை ஒழுங்காக எடுத்துக் கொள்ள வேண்டும், சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதித்து, நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் சுகவீனம் அடையும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதற்கேற்ப இன்சூலின் உட்பட மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு உணவு மற்றும் போதியளவு திரவங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கான சில குறிப்புகள்

உங்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள் – இது மிகவும் முக்கியம்

உங்களுக்கு மிதமான அறிகுறிகள் ஏற்பட்டாலும், உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர் அறிவுரையின்றி, எந்த மருந்தையும் நிறுத்த வேண்டாம். ஒருவேளை, உங்கள் மருத்துவரை சந்திக்க முடியவில்லை என்றால், உங்களின் ரத்தஅழுத்த, நீரிழிவு மற்றும் இதய நோய் மருந்துகளை தொடருங்கள். கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளும் தொடர வேண்டும்.

ரத்த அழுத்த மருந்துகள், கொவிட்-19 ஐ கடுமையை அதிகப்படுத்துவதாக கூறப்படும் தகவல்கள் பற்றி?

கிடைக்கும் தகவல்களை ஆய்வு செய்தபின், விஞ்ஞானிகள் மற்றும் இதய நிபுணர்களின் ஒருமித்த கருத்து இது தான். இரண்டு விதமான மருந்துகள் ஏசிஇ மருந்துகள் (உதாரணத்துக்கு ரமிபிரில், எனலாபிரில், போன்றவை) மற்றும் ஏஆர்பி மருந்துகள் லோசர்டன், டெல்மிசர்டன் போன்றவை) கொவிட்-19 கடுமையாக அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதய செயல் இழப்புக்கு இந்த மருந்துகள் பயனுள்ளவை மற்றும் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இவற்றை நீங்கள் நிறுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தலாம். இது உங்கள் இதயத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கும்.

வலி நிவாரணி அல்லது காய்ச்சல் மாத்திரை இவற்றில் எதை நான் எடுத்துக் கொள்ளலாம்?

NSAIDs என அழைக்கப்படும் இபுபுரொபன் போன்ற வலி நிவாரணிகள் கொவிட் -19 பாதிப்பை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற மருந்துகள் இதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீரக பாதிப்பையும் அதிகரிக்கலாம். எனவே NSAIDs மருந்துகளை தவிர்த்து உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் சாப்பிடுங்கள். தேவைப்பட்டால், பாதுகாப்பான வலி நிவாரணியான பாரசிட்டாமலை மட்டும் பயன்படுத்துங்கள்.

ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடற்பயிற்சியை தவறாமல் செய்யவும்.

ஆபத்தான சிலவற்றை கட்டுப்படுத்துவது முக்கியம். புகைப்பிடிப்பது, மது அருந்துவதை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும். உடற்பயிற்சியை தவறாமல் செய்யவும். சமூக இடைவெளிக்கு ஏற்ப உங்கள் வெளிப்புற நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளலாம். உணவு மற்றும் உப்பு அளவை அறிவுறுத்தியபடி பின்பற்றவும். நீங்கள் அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், அதை தொடரலாம். உணவில் நார் சத்து, புரதம், காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்ப்பது நல்லது.

கொவிட்-19 அறிகுறிகள் ஏற்பட்டால், நான் என்ன செய்ய வேண்டும்?

a. உங்களுக்கு கொவிட் -19 அறிகுறிகள் ஏற்பட்டால், மருத்துவரை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை பெறவும்.

b. அருகில் உள்ள கொவிட்-19 பரிசோதனை கூடத்தை அணுகி, சோதனைக்கு ஏற்பாடு செய்யவும்.

c. பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருக்கும்போது, வீட்டில் இருக்கவும், குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்கவும். கை சுத்தத்தை பராமரித்து, மருத்துவ முகக் கவசத்தை சரியாக அணியவும்.

d. கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி வீட்டில் (Home Isolation) தனிமை படுத்திக்கொள்ளவும்.

e. உங்கள் அறிகுறிகள் மோசமானால், உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு மேல் ஆலோசனை பெறவும்.

கொவிட்-19-ஐ தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இருமும் போதும், தும்மும் போதும் மற்றும் வாய்விட்டு சிரிக்கும்போதும் தெறிக்கும் எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலம் கொவிட்-19 பரவுகிறது. தொடுதல் மூலமாகவும் பரவும். வைரஸ் உள்ள பொருட்களை தொடும்போது, அந்த வைரஸ் உங்கள் கைகளில் பரவும். அதன்பின் உங்கள் முகத்தை நீங்கள் தொட்டால், கொவிட் பாதிப்பு ஏற்படும். வைரஸ் துகள்கள் 3 நாட்கள் வரை இருக்கும். அதனால் உங்கள் சுற்றுப்புற சுத்தத்தை பராமரிப்பது முக்கியம். அறைகள், மேஜைகள், இதர மேற்பரப்புகளை, சோப் தண்ணீரில் கழுவவும். தெரியாத மற்றும் சந்தேகத்துக்குரிய மேற்பரப்புகளை தொட்டால், கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யவும்.

தொற்று ஏற்படுவதையும், பரவுவதையும் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் என்ன?

  1. முகக்கவசம் அணியவும் – ஆரோக்கியமானவர்களை பாதுகாக்கவும், தொற்றுபரவலை தடுக்கவும் இது மிக முக்கியம்

a. கூட்டமான பகுதிகள், காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில் மருத்துவ முகக் கவசம் அணியவும். இதை வழக்கமாக்கி கொள்ளவும்.

b. முகக்கவசம் உங்கள் மூக்கு, வாய், கன்னம் ஆகியவற்றை மூடியிருக்க வேண்டும்.

c. முகக்கவசத்தை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும்.

d. முகக்கவசம் அணிந்தாலும், 1 மீட்டர் தூர சமூக இடைவெளியை பராமரிக்கவும்.

e. வீட்டுக்கு குடும்ப உறுப்பினர் தவிர வேறு யார் வந்தாலும், முகக் கவசம் அணியவும்.

f. முககவசம் அணியும் முன்பும், பின்பும் கைகளை கழுவவும்.

g. அசுத்தம் அடைந்தாலோ, தண்ணீரில் நனைந்தாலோ, முகக்கவசத்தை மாற்றவும். அவற்றை குப்பை தொட்டியில் முறையாக போடவும்.

  1. சமூக இடைவெளி

a. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற கொவிட் அறிகுறி உள்ளவர்களை தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.

b. தேவையற்ற பயணம் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

c. பொது இடங்கள், கூட்டம் அதிகம் உள்ள குடும்ப நிகழ்ச்சிகளை தவிர்க்கவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொலைபேசி, இணையதளம் மற்றும் சமூக இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளவும்.

d. மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை கூடங்களுக்கு தொடர்ந்து செல்வதை தவிர்க்கவும். சிறு பிரச்னைகளுக்கு மருத்துவமனைகளை போனில் தொடர்பு கொள்ளவும். ஐஎன்ஆர் பரிசோதனை நீங்கள் வழக்கமாக மேற்கொள்பவராக இருந்தால், மருத்துவரை தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். மருத்துவமனைக்கு செல்வதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

  1. கை சுத்தம்

a. கை குலுக்குதல் மற்றும் முகத்தை கையால் தொடுவதை தவிர்க்கவும்.

b. கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவவும்.

c. ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினி பயனுள்ளதாக இருக்கும்.

d. பொது கழிவறை கதவுகள், கைப்பிடிகள் போன்ற அசுத்தமான பகுதிகள்/பொருட்களை தொடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply