வாக்கு எண்ணிக்கையின் போது விதிகளை தவறாமல் பின்பற்றுவது குறித்து தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது விதிகளை தவறாமல் பின்பற்றுவது குறித்து தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஆணையத்தால் 2020 ஆகஸ்ட் 21 மற்றும் 2021 ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டு https://eci.gov.in/files/file/12167-broad-guidelines-for-conduct-of-general-electionbye-election-during-covid-19/ மற்றும் https://eci.gov.in/files/file/13361-broad-guidelines-for-covid-safety-during-counting-of-votes-on-2nd-may-2021/ ஆகிய இணையதள முகவரிகளில் இருக்கும் விதிமுறைகள் தலைமை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மை செயலாளர் சுமித் முகர்ஜி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விதிமுறைகளை (கொவிட்-19 நடவடிக்கைகள்) தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளையும் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை/வெற்றி தொடர்பான பொதுக் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றை அனுமதிக்கக் கூடாது. தொடர்புடைய மாநில/யூனியன் பிரதேச அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகளவில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கூடக்கூடாது என்று அக்கடிதத்தில் சுமித் முகர்ஜி கூறியுள்ளார்.

அனைத்து மாநில/யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இக்கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply