அழுக்கைப் போக்க சோப்பு!-ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு!- பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி (PSBB)ஆசிரியர் ராஜகோபாலனின் வக்கிர புத்தி..!-தமிழக முதல்வரை மிரட்டும் சுப்ரமணியன் சுவாமி.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜகோபாலன்.

சென்னை, கே.கே. நகர், பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர், அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 2012 ஆம் ஆண்டின் போக்சோ சட்டத்தின் பிரிவு 12, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 354 – ஏ, 509, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67, 67ஏ பிரிவுகளின் கீழ் சென்னை, அசோக் நகர் மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அதன் பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனையாக திசைத் திருப்பும் முயற்சியில் அப்பள்ளி நிர்வாகத்தினர் ஈடுப்பட்டு வருகின்றனர். இது காவல்துறையினரின் விசாரணைக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசையும், தமிழக முதலமைச்சரையும் சுப்ரமணியன் சுவாமி வெளிப்படையாகவே மிரட்டி வருகிறார். ஒரு மாநில அரசின் உள்துறை அமைச்சக விவகாரத்தில் தலையிடுவதற்கு சுப்ரமணியன் சுவாமிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?!

பள்ளி நிர்வாகத்தினர் சுப்ரமணியன் சுவாமிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் தமிழக அரசையும், தமிழக முதலமைச்சரையும் மிரட்டலாமா?!

சுப்ரமணியன் சுவாமியின் பேத்திக்கோ; மகளுக்கோ இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அவர் சும்மா இருப்பாரா?!

தமிழக காவல்துறையின் நடவடிக்கை மற்றும் விசாரணையில் உண்மையிலுமே உள்நோக்கம் இருக்குமானால், பள்ளி நிர்வாகத்தினரோ (அல்லது) சுப்ரமணியன் சுவாமியோ தாரளமாக நீதிமன்றத்தில் முறையிடலாம். அதைவிட்டுவிட்டு இப்படி வெளிப்படையாக மிரட்டல் போக்கை கடைப்பிடிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

இதுபோன்ற சம்பவங்கள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறவில்லையா?!-என்ற விமர்சனம் தற்போது முன் வைக்கப்படுகிறது.

சட்ட விரோதமான செயல்களில் யார் ஈடுப்பட்டாலும்; அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. அப்படி ஏதாவது ஆதாரப்பூர்வமானத் தகவல்கள் இருந்தால் தாரளமாக எமக்கு அனுப்பி வையுங்கள்; அதை வெளியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எல்லா சாதியிலும்; எல்லா மதத்திலும்; நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. எனவே, ஒரு பிரச்சனையை பிரச்சனையாகதான் பார்க்க வேண்டுமே தவிர; அவர்கள் என்ன சாதி? என்ன மதம்? எந்த கட்சி? என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பார்த்தால் இதுபோன்ற விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜகோபாலன்.

Important-Communication-to-Parents

அது சரி, போக்சோ சட்டம் என்றால் என்ன?!

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் இந்த Protection of Children from Sexual Offences (POCSO) போக்சோ சட்டம், கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

  1. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழி செய்வது போக்சோ சட்டம்.
  2. இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.
  3. இந்த சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி குறிப்பிட்ட வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும்.
  4. குற்றம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த பிறகுதான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை, புகார் வந்த உடனையே போலீஸார் விசாரணையை துவங்கலாம்.
  5. பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கே சென்று போலீஸார் விசாரணை நடத்தலாம். அதேபோல் காவல்நிலைய எல்லை காரணம் காட்டி விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது.
  6. இந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிகளை காவல்துறை மீறினால் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்வதற்கு போக்சோ சட்டம் இடம் அளித்துள்ளது.

போக்சோ சட்டம் குறித்த மேலும் விரிவான தகவல்களை தெரிந்துக்கொள்ள கீழ்காணும் இணைப்பை பார்க்கவும்.

The-Protection-of-Children-from-Sexual-Offences-Act-2012_0

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply