தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 11) நேரில் சென்று சந்தித்தார்.

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

அப்போது, கொரோனா நிவாரண நிதிக்கான காசோலையை விஜயகாந்த் வழங்கினார். அதனை ஸ்டாலின் பெற்று கொண்டார். இந்த சந்திப்பின் போது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் இரண்டு மகன்களும் உடன் இருந்தனர்.

எஸ்.திவ்யா.

Leave a Reply