காரைக்குடியைச் சேர்ந்த டாக்டர் கே.கிரிபாபுவுக்கு இளம் விஞ்ஞானி விருது.

டாக்டர் கே.கிரிபாபு

காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் – மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிக்ரி) பணிபுரியும் விஞ்ஞானி டாக்டர் கே.கிரிபாபுவுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான, சிஎஸ்ஐஆர் இளம் விஞ்ஞானி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரசாயன அறிவியல் துறையில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 26-ந் தேதியன்று நடைபெறும் சிஎஸ்ஐஆர் நிறுவன நாள் விழாவில் இந்த விருது அளிக்கப்படும்.

இந்தத் தகவல், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிக்ரி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply