அரசு போக்குவரத்து கழகத்தின் அவல நிலை!- ஓட்டுநரின் புகாரால் அரசு பேருந்தின் டயர், ஹாரன் மாற்றப்பட்டு; மீட்டரும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது!

சில தினங்களுக்கு முன்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தேவகோட்டை கிளை பராமரிப்பில் இயங்கி வரும் TN 63 -1472 என்ற நகரப் பேருந்தின் டயர் தேய்மானம் அடைந்தும்; ஹாரன் ஒலி எழுப்பாமலும்; மீட்டர் செயல்படாமலும் இருந்து வந்த நிலையில், இதுகுறித்து அப்பேருந்தின் ஓட்டுர் ஒரு வீடியோ பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு இருந்தார்.

அவரது பல நாள் வேதனையையும்; சக ஓட்டுநர்களின் உள்ள குமுறலையும் பிரதிபளிப்பதாகதான் அந்த வீடியோ பதிவு இருந்தது.

இவற்றின் உண்மைத்தன்மை குறித்து அறிவதற்காக நமது UTL MEDIA TEAM கடும் முயற்சி மேற்கொண்டது.

இன்று (16.11.2021) தற்போதைய நிலை.

தற்போது அப்பேருந்தின் பழைய டயர் நீக்கப்பட்டு; புது டயர் மற்றும் ஹாரன் உடனடியாக பொருத்தப்பட்டுள்ளது. மீட்டரும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கும் பொருந்தும் என்பதை சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அமைச்சரும் மற்றும் அதிகாரிகளும் முதலில் நன்கு உணர வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அனைத்து பேருந்துகளின் தொழிட் நுட்ப செயல்பாடு மற்றும் அவற்றின் உறுதி தன்மை ஆகியவற்றை ஆராய்வதற்கு மோட்டார் வாகனத் தொழிட் நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களைக் கொண்டு மண்டலம் தோறும் ஆய்வு குழுவை அமைக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களின் பதிவு தாள் (log sheet) முறையாக பராமரிக்கப்படுகிறதா? அவற்றில் குறிப்பிடப்படும் பேருந்துகளின் தொழிட் நுட்ப கோளாறுகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறதா?

இரவு நேரங்களில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் மோட்டார் மெக்கானிக், எலக்ட்டிரிசன், டயர்மேன்.. ஆகிய தொழிட் நுட்ப பணியாளர்கள் உறங்காமல் விழித்திருந்து பணி செய்கிறார்களா?

மேற்படி நபர்களை கண்காணித்து, மேற்பார்வையிட்டு வேலை வாங்க வேண்டிய இளநிலை மற்றும் உதவி பொறியாளர்கள் குறித்த நேரத்திற்கு முறையாக பணிமனைக்கு பணிக்கு வருகிறார்களா? அவர்கள் முதலில் உறங்காமல் விழித்திருந்து பணி செய்கிறார்களா? என்பதை பார்வையிடுவதற்கு இரவு நேர திடீர் கண்காணிப்பு குழுவையும் அமைக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் பழுதடைந்த மற்றும் தேய்மானமடைந்த பாகங்களை தாமதமின்றி உடனே மாற்றி சரிசெய்வதற்கு ஏற்ற வகையில் பணிமனைகளில் தேவையான அளவிற்கு உதிரி பாகங்கள் (Spare parts) கையிருப்பில் இருக்க வேண்டும். இதை சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும்,தொழிற்சங்க நிர்வாகிகள் என்ற போர்வையில், அவர்களுக்கான உரிய பணியை செய்யாமல், அதிகாரிகளையும் சுதந்திரமாக பணி செய்யவிடாமல் மிரட்டி, வெட்டியாக மாதந்தோறும் தெண்ட சம்பளம் பெற்று வரும் நபர்களை முதலில் கண்காணித்து களையெடுக்காதவரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply