மதுரையை சேர்ந்த நபர் திருச்சி காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு!

மதுரை, ஆரப்பாளையம், மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், திருச்சியில் உறவினர் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக, சுமார் 20-க்கும் மேற்பட்ட தனது உறவினர்களுடன் சேர்ந்து 16.12.2021 அன்று திருச்சி வந்துள்ளார்.

துக்க காரியத்தில் கலந்து கொண்டு இறந்தவர் உடலை எரியூட்டுவதற்காக 16.12.2021 அன்று மாலை உறவினருடன் சேர்ந்து ஓயாமரி சுடுகாட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு காவிரி ஆற்றில் அனைவரும் கும்பலாக குளித்துள்ளனர்.

குளித்து முடித்து அனைவரும் கரைக்கு வந்து பார்த்தபோது நாகராஜன் உடுத்திருந்த ஆடைகள் மட்டும் அனாதையாக கிடந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகுதான் காவிரி ஆற்று நீரில் மூழ்கி நாகராஜன் மாயமானது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. நாகராஜன் உள்பட நாகராஜனோடு ஆற்றில் குளித்த அனைவருமே மதுபோதையில் இருந்ததுதான் இந்த துயர சம்பவத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.

அதன் பிறகு நாகராஜன் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமானது குறித்து காவல்துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

16.12.2021 அன்று இரவு நேரம் ஆகிவிட்டதால் உடனே தேடுதல் பணியை தொடங்க முடியவில்லை. இந்நிலையில், 17.12.2021 காலை முதல் தேடுதல் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஈடுபட்டனர். ஆனால், காவிரியாற்றில் மாயமான நாகராஜனின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் தேடுதல் பணி கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று (19.12.2021) பிற்பகல் 3 மணி அளவில் திருச்சி – கல்லணை சாலை, திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டகுடி கிராமம் அருகே காவிரியாற்றில் நாகராஜனின் உடலை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தேடி கண்டுபிடித்தனர். அதன் பிறகு உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் துரைராஜ் வசம், நாகராஜனின் உடலை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு நாகராஜனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்ப்பட்டது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ”கிளிக்” செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2021/12/17/65348/

Leave a Reply