2021 ஆண்டு கண்ணோட்டம்!-வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்.

2021-ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகள் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முயற்சிகளை பல வழிகளில் அதிகரிக்க உதவியுள்ளன.

திட்டங்களும் பணிகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா முன்முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

குடிசைவாசிகள் உள்ளிட்டோரின் நகர்ப்புற வீட்டுப் பற்றாக்குறையை சீர் செய்ய பிரதமரின் வீட்டுவசதி திட்டம் – நகர்ப்புறங்களில் தொடங்கப்பட்டதன் மூலம், தகுதியான நகர்ப்புற குடும்பங்களுக்கு 2022-ம் ஆண்டுக்குள் ஒரு சிறந்த வீட்டை உறுதி செய்வதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் கட்டுமான தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்திற்கு இது வழிவகுத்தது, இதனால் மேக் இன் இந்தியா முன்முயற்சி உத்வேகம் பெற்றது. தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் திட்டம், குறிப்பிடத்தக்க வகையில் மலிவு வாடகை வீடுகளுக்கான தீர்வுகளை உருவாக்கி, “அனைவருக்கும் வீடு” என்ற ஒட்டுமொத்த நோக்கத்தை அடைய உதவுகிறது .

மேலும், அம்ருத், தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம், தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், விடுதலையின் அமிர்த பெருவிழா, பிரதமரின் சாலையோர வணிகர் தற்சார்பு நிதி மற்றும் நகர்ப்புற போக்குவரத்து உள்ளிட்டவற்றிலும் அமைச்சகம் சிறப்பாக பங்காற்றி வருகிறது.

திவாஹர்

Leave a Reply