TNPSC போட்டித் தேர்வுகள் ஒத்திவைப்பு!-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!-முழு விபரம்.

02-PRESS-RELEASE

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் முக்கியமான மூன்று தேர்வுகள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ்‌ பெருந்தொற்றின்‌ அதீத பரவல்‌ மற்றும்‌ ஓமைக்ரான்‌ வைஸ்‌ பரவலை கருத்தில்‌ கொண்டும்‌, தமிழக அரசினால்‌ தற்போது, மாநிலம்‌ முழுவதும்‌ 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளநிலையில்‌, பொது போக்குவரத்து மற்றும்‌ உணவிற்கான வசதி இல்லாத சூழலில்‌ தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும்‌ சிரமத்தை கருத்தில்‌ கொண்டும்‌, இது குறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின்‌ அடிப்படையிலும்‌, 09.01.2022 (ஞாயிற்றுக்கிடிமை) அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்‌ தேர்வு மட்டும்‌ 11.01.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தேர்வர்கள்‌ 09.01.2022 நடைபெறுவதாக இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம்‌ செய்த நுழைவுச் சீட்டினையே உபயோகித்து, 11.01.2022 அன்று நடைபெறும்‌ தேர்வினை, நுழைவுச்சீட்டில்‌ குறிப்பிடப்பட்டுள்ள அதே தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 08.01.2022 நடைபெறவிருந்த தமிழ்நாடு நகர்‌ ஊரமைப்பு சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய கட்டிடகலை, திட்ட உதவியாளர்‌ பதவிக்கான எழுத்துத்‌ தேர்வு திட்டமிட்டபடி அதே நாளில்‌ நடைபெறும்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply