CPSC டிரஸ்ட் மீது சிபிஐ வழக்குப் பதிவு!-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகலும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேனின் விளக்கமும்!

மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன்.

c4410c33-dc8a-41c5-be0a-63a9cb3d1aa1RC0692022E0002FIR

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் தாய் அமைப்பான The Centre for Promotion of Social Concerns (CPSC) டிரஸ்டின் மீது மத்திய புலனாய்வு துறையினர் பன்னாட்டு நிதி முறைகேடு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ளதோடு, அந்தக் கணக்கு வழக்கு ஆவணங்களைை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவு பெற்று, மேற்படி நிறுவனத்தில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சோதனையும் நடத்தியுள்ளனர்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட, ஏராளமான நபர்கள் எழுத்துப்பூர்வமாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விசாரிக்கப்பட்ட புகாருக்கு, இப்போது வழக்குப் பதிவு செய்ய வேண்டி ய அவசியம் என்ன? என்பதுதான் அனைவருடைய கேள்வியாகவும் இருக்கிறது.மனித உரிமை செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை முடக்குவதற்காகதான் பாரத பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இவர்கள் அனைவருமே குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இவ்விஷயத்தில் உண்மை அதுவல்ல! மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேனுக்கு எதிரிகள் அதிகம். ஹென்றி திபேனால்்பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் அவருக்கு எதிரானவர்களும் தொடர்ந்து அளித்து வரும் புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) பதிவு செய்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் உண்மை அறியும் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேனுக்கு, இந்த உண்மைகள் தெரியாமல் போனது உண்மையிலுமே ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு நபரை பற்றியோ; ஒரு நிறுவனத்தை பற்றியோ புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தால், அது பொய் புகாராகவே இருந்தாலும், அதனை ஆய்வு செய்து விசாரிக்க வேண்டிய அடிப்படை கடமை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு உண்டு. அந்த அடிப்படையில்தான் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தங்கள் கடமையை செய்துள்ளனர்.

எனவே, இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோதியையும் மத்திய அரசையும், மத்திய புலனாய்வுத்தறை அதிகாரிகளையும் குறை சொல்வதை விட்டுவிட்டு தனது காலடியில் இருக்கும் உண்மையான எதிரிகளையும் துரோகிகளையும் அடையாளம் காண மக்கள் கண்காணிப்பகம் முயற்சிக்க வேண்டும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply