தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையம்!- ”உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரை பெஞ்சமின் அவர்களின் கருத்துக்கு, உயிரூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.(File Photo)

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதாவது 25.06.2021 அன்று ”காவல் துறையில் போர்கால அடிப்படையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள்..!” -என்ற தலைப்பில், நமது ”உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரை பெஞ்சமின் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, 4 பக்கங்கள் கொண்ட விரிவானக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Dr.DURAI BENJAMIN, BAMS., M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com

Letter-to-TN.CM-MKS-JUNE-25-2021-20.57PM

ஆறு மாதங்களுக்கு முன்பு எழுதிய அந்த கடிதத்திற்கு இன்று (19.01.2022) தான் விடிவு காலம் பிறந்திருக்கிறது. ஆம், காவலர் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்த ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய ”காவல் ஆணையம்” அமைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆணையிட்டுள்ளார்.

அந்த ஆணையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.(File Photo)

ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம்..(File Photo)

pr190122_129

இன்று (19.01.2022) வெளியிட்ட இந்த ஆணையை, சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தால், தமிழ்நாடு காவல்துறையில் நடைப்பெற்ற சில விரும்பதகாத சம்பவங்களை நிச்சயம் தடுத்து இருக்கலாம். பரவாயில்லை; இப்போதாவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தாரே! அதற்காக அவரை பாராட்டலாம். கால தாமதமான அறிவிப்பாக இருந்தாலும், இதை நமது ”உள்ளாட்சித்தகவல்” முழு மனதோடு வரவேற்கிறது.

தொகுப்பு: கே.பி.சுகுமார்., B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply