சிக்கலை ஏற்படுத்தியுள்ள சிறுமி லாவண்யா தற்கொலை விவகாரம்!-முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேர்மையை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

செயின்ட் மைக்கேல் மாணவியர் விடுதி.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருவையாறு காவல் உட்கோட்டம், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மைக்கேல்பட்டி என்ற கிராமத்தில் உள்ள செயின்ட் மைக்கேல் மாணவியர் விடுதியில் தங்கி, அங்கே உள்ள தூய இருதய பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாவட்டம், வடுக பாளையத்தைச் சேர்ந்த தாயை இழந்த 17 வயது மாணவி ஒருவர்; விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும், அவரை மருத்துவ தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்காமல், பிரச்சனை பெரிதாகி விடும் என்பதால், பயந்து கொண்டு அவரை அவரது தந்தை வசம் ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாகவும், இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

இது சம்பந்தமாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு (40/2022) செய்யப்பட்டு மைக்கேல்பட்டி மாணவியர் விடுதி காப்பாளர் சகாயமேரி (வயது 62) என்பவரை இந்திய தண்டனைச் சட்டம் 305 (பதினெட்டு வயதுக்கு உட்பட்டவரின் தற்கொலைக்கு உடந்தை), 511 (மரணத் தண்டனை; ஆயுள் தண்டனை குற்ற முயற்சி) 75, 82(1) ஆகிய பிரிவுகளின் கீழ் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் 18.01.2022 அன்று கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், அச்சிறுமி உயிரிழப்பதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட காணொளி, தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவியை அந்த கிறிஸ்துவ பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சியும், அதனைச் சார்ந்த இந்து அமைப்புகளும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இப்பிரச்சனையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்கும் பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு உரிய விளக்கமளிக்குமாறு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்ணாமலை, தலைவர் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.

S.சுரேஷ்குமார், மாநில ஒருங்கினைப்பாளர், இந்து சங்கமம்.

அனுப்புதல்:
S.சுரேஷ்குமார்,
மாநில ஒருங்கினைப்பாளர்,
இந்து சங்கமம்

பெறுதல்:

1) மேதகு திரு. R.N. ரவி IPS. அவர்கள்,
ஆளுநர் ,தமிழ்நாடு,
சென்னை-600022.

(2) மாட்சிமிகு, கனம். பதிவாளர் ஜெனரல் அவர்கள்,
கணம் சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை-600104.

ஐயா,         

 பொருள்: அரியலூர் மாவட்டம், வடுகம் பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா (வயது 17) என்பவரின் இறப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தகுந்த நீதி வழங்குதல் சம்பந்தமாக.

._____________

வணக்கம். அரியலூர் மாவட்டம்,  வடுகம் பாளையத்தை சேர்ந்த திரு, முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா ( வயது 17) என்பவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த சூழ்நிலையில் அப்பள்ளி நிர்வாகத்தினர் அறைகளை சுத்தம் செய்வது, தோட்டத்தில் பூக்கள் அகற்றுவது, செடிகளை பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளையும் மற்றும் திருச்சி கருமண்டபம் பகுதிகளில் உள்ள அலுவலகத்திற்கு தூய்மை பணிக்காக அவ்வப்போது மாணவியை நிர்வாகிகள் அழைத்துச் செல்வதும்நடந்து உள்ளது. மேலும் மாணவி லாவண்யா கிறிஸ்தவ மதத்திற்கு  மதம் மாறினால் கடலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் படிக்க  வைப்பதாக கூறி உள்ளனர் நிர்வாகத்தினரின் சொல்படி மாணவி லாவண்யா மதம் மாற மறுத்ததால் அப்பள்ளி நிர்வாகிகள் லாவண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளதாக தெரியவருகிறது இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான லாவண்யாகடந்த09.01.2022 அன்றுமதியம் செடிகளை பராமரிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து உள்ளார் சில நிமிடங்களில் வாந்தி எடுத்த மாணவியை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த விடுதி நிர்வாகம் உடனடியாக பெற்றோரை வரவழைத்து மறுநாள் 10ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது லாவண்யா மீண்டும் வாந்தி எடுத்ததால் அவரதுகுடும்பத்தினர் அவரை 13ஆம் தேதி குளத்தூர் அரசு மருத்துவமனையிலும் ,12 மற்றும் 13 தேதிகளில் திருமானூர் அரசு மருத்துவமனைக்கு ம்அழைத்துச் சென்று சிகிச்சைஅளித்து உள்ளனர்ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 15ஆம் தேதி அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர் 15ஆம் தேதி முதல் சிகிச்சையில் இருந்த மாணவி 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து இருக்கிறார்இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட காவல் துறையினர் உடனடியாகஎந்த ஒரு சரியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து உள்ளதாக தெரியவருகிறதுதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா IPS அவர்கள் முழுமையான விசாரணை முடிவு பெறுவதற்கு முன்பேமத மாற்றம் தொடர்பாக ஒரு வார்த்தைகூட மாணவி குறிப்பிட வில்லை என கூறியுள்ளார்.ஐயா, லாவண்யா சிகிச்சையில் இருந்த போது போலீசாரிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தில்”விடுதி வார்டன் சகாயமேரி என்பவர் அவருடைய சொந்த வேலைக்காக அடிக்கடி திருச்சி கருமண்டபம் அலுவலகம் என்னை அழைத்துச் செல்வார் அதை பெற்றோர் கண்டித்தனர் இதனால் பெற்றோருக்கு தெரியாமல் போகலாம் வா”என்று அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார் அது ஏன் என தெரியவில்லை?மாணவி 9ஆம் தேதி விஷம் அருந்திய நிலையில் 19ஆம் தேதி அதாவது பத்து நாள் கழித்து இறந்துள்ளார் முதல் தகவல் அறிக்கையில் விஷம் அருந்திய அன்றே அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நர்ஸ் ஒருவரிடம் சிகிச்சை பெற்றதாக உள்ளது மாணவி விஷம் அருந்திய தகவல் தெரியாமலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட தா என தெரியவில்லை?மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் மாணவி விஷமருந்தி இருந்ததை  யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லையா என தெரியவில்லை?ஐயா, தமிழ்நாட்டில் தற்போது கிறிஸ்தவ மத போதகரான ஜார்ஜ் பொன்னையா, மோகன் லாசரஸ்போன்றவர்கள் எங்களது இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவதும் இந்துக்களை மதமாற்றம் செய்ய கட்டாயப் படுத்திக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் மற்றொரு கிறிஸ்தவ மத போதகரான பேராயர் எஸ்ரா .சற்குணம் என்பவர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது அவரின் தனிப்பட்ட விருப்பம் கிறிஸ்தவத்தை பின்பற்ற அழைப்பது எங்கள் உரிமை பிடிக்காவிட்டால் வேறு பள்ளியில் சேர்ந்து இருக்க வேண்டும் தூய இருதய மேல் நிலை பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கூறியுள்ளார் இவர்கள் அனைவரும் தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்திற்கு மிகவும் வேண்டிய வர்கள் இங்கு லாவண்யாவின் இறப்பிற்கு நியாயம் கிடைக்காதுஆகவே தாங்கள் இது குறித்து” தனி கவனம்” செலுத்தி மாணவி லாவண்யா விற்கு ஏற்பட்ட துன்பம் இவரைப்போன்ற மற்ற மாணவிகளை பாதிக்காத வண்ணம் கட்டாய மதமாற்றம் என்ற பெயரால் இவர்கள் எங்களது இளம் தளிர்களை வேரறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டுஇனிமேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழாவண்ணம் தடுக்கும் நோக்கத்துடன் தாங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு லாவண்யாவின் இறப்பிற்கு தகுந்த நீதி வழங்க மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.     

தங்கள் உண்மையுள்ள,

S.சுரேஷ்குமார்.

தொல் திருமாவளவன், நிறுவனத் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

நடிகர் விஜயகாந்த், நிறுவனத் தலைவர் தேமுதிக.

விஷம் அருந்திய அந்த மாணவியை காலதாமதம் இல்லாமல் உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து உள்நோயாளியாக தொடர் சிகிச்சை செய்து இருந்தால் நிச்சயம் அந்த மாணவி உயிர் பிழைத்து இருப்பார். இதை செய்யத் தவறியது விடுதி நிர்வாகத்தின் மிகப் பெரிய தவறு.

பெற்ற தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பை துறந்து தங்களையே கதி என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்த அந்த மாணவியை கண்ணும் கருத்துமாக இருந்து கண்காணித்து காப்பாற்ற வேண்டிய விடுதி நிர்வாகம். ஏதோ ஒரு வகையில் அச்சிறுமியின் தற்கொலைக்கு காரணமாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

ஆனால், மதமாற்ற வற்புறுத்தலால் மட்டும்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு உத்தரவிடுவதில் எந்த தவறும் இல்லை.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தயக்கம் காட்டத் தேவையில்லை. தங்களது நேர்மையை நிரூபிக்க வேண்டிய தருணமாக கருதி சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும்.

அனைத்து மதத்திலும், அனைத்து இனத்திலும், எல்லா அமைப்பிலும், எல்லா அரசியல் கட்சிகளிலும் நல்லவர்களும், இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.

எனவே உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானது. இதில் ஜாதி, மத, மொழி பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இலலை. .

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply