நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வட்டார தேர்தல் பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதை நமது வாசகர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
ulb_2022_block_observer_watermarked
ஆனால், ஒவ்வொரு மாவட்டத்தையும் கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து அவர்களின் பெயர்களை பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அவர்களின் அலைபேசி எண்களை மட்டும் இந்த செய்தி பதிவேற்றம் செய்யும் இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை.
வட்டார தேர்தல் பார்வையாளர்களின் தவறுகளை எப்படி சிறப்பு தேர்தல் பார்வையாளர்களுக்கு தெரிவிக்க முடியும்?! -இதை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் V. பழனிக்குமார் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், வட்டார தேர்தல் பார்வையாளர்களுக்கு அலைபேசி மற்றும் தொலைபேசி மூலம் வரும் புகார்கள் அனைத்தையும் குரல் பதிவு செய்து உடனே நடவடிக்கை எடுப்பதோடு; தகவல் மற்றும் புகார் தெரிவிக்கும் நபர்களின் பெயர்களை இரகசியமாக பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முயுயும் வரை வட்டார தேர்தல் பார்வையாளர்களின் அலைபேசி இரவு -பகல்( 24 மணி நேரமும்) எந்நேரமும் செயல்பாட்டில் இருக்கிறதா?!-வரும் அழைப்புகள் அனைத்தையும் அவர்கள் தவறாமல், தாமதமில்லாமல் எடுத்து பேசுகிறார்களா?! என்பதை உறுதிப்படுத்த, அவர்களை கண்காணிக்க, மேற்பார்வையிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இதுவரை என்ன திட்டம் வைத்துள்ளது?!-இதையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் V. பழனிக்குமார் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
வட்டார தேர்தல் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கையையும் முழுமையாக கண்காணிக்காதவரை இத்தேர்தலை நேர்மையாக நடத்த இயலாது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com