திருச்சி மலைக் கோட்டை அருகே தீ விபத்து!-பிரபல வணிக நிறுவனங்கள் தப்பியது.

திருச்சி மாநகரத்தின் இதயமாக இருக்கும் மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் அருகே சுபாஷ் சந்திர போஸ் (NSB) சாலை, சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி ஆகிய சாலைகள் ஒன்றாக இணையும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் தங்கத்தை தரம் மதிப்பீடு செய்யும் பாலாஜி ஹால்மார்க் என்ற நிறுவனத்தில் இன்று மதியம் 1:30 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் பாலாஜி ஹால்மார்க் நிறுவனத்தில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் தரை தளத்தில் இருந்த நகைக்கடை அருகில் இருந்த துணிக்கடைகள் மற்றும் அப்பகுதிகளில் இருந்த பிரபல வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தீ விபத்திலிருந்து தப்பித்தன.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply