தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் விதிமுறை மீறல்!-கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து!

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில ஆணையத்தால் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பேரூராட்சி செயல் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களே தேர்தல் விதி மீறல்களில் ஈடுப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது,“அழுக்கைப் போக்க சோப்பு!-ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு!”- என்ற கவிதை வரிகள்தான் இப்போது என் நினைவுக்கு வருகிறது.

வட்டார தேர்தல் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கையையும் முழுமையாக கண்காணிக்காதவரை இத்தேர்தலை நேர்மையாக நடத்த இயலாது என்று, February 5, 2022 அன்று 2:14 pm மணிக்கு நான் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டு இருந்தேன். அதே கருத்தைதான் இப்போதும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்

.https://www.ullatchithagaval.com/2022/02/05/67866/

http://www.ullatchithagaval.com/2022/02/05/67813/

Leave a Reply