மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:
கேலோ இந்தியா மையங்கள் அமைப்பதற்கு 36 திட்டங்களுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு கேலோ இந்தியா மையம், 11 வியைாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்கள் அமைப்பதற்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கேலோ இந்தியா திட்டம், தேவை அதிகம் உள்ள திட்டம். இந்தத் திட்டங்கள் எல்லாம், தொழில்நுட்ப சாத்தியமான திட்டங்களாகவும், பரிந்துரைக்கப்பட்ட அளவீடுகளை பின்பற்றுவது, நிதியின் இருப்பு ஆகியவை அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன.
–திவாஹர்