மின்சார பவுண்டேஷனுடனான கூட்டத்திற்கு மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் தலைமை ஆர்.கே.சிங் நேற்று இணையம் வழியான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
மின்துறை செயலாளர் திரு.அலோக் குமார் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சக செயலாளர் திரு.இந்து சேகர் சதுர்வேதி, பொதுத்துறை மின்சார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மேலாண் இயக்குனர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மின்சார பவுண்டேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான கட்டமைப்பு, நோக்கங்கள், கொள்கை வகுத்தல் ஆகியவை பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் எரிசக்தி மாறுதல் பயணத்திற்கு ஆதாரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை நடத்தவும், மின்சார போக்குவரத்து சமையலுக்கான மின்சாதனம் போன்றவற்றில் நுகர்வோருக்கு விழிப்புணர்வை மேம்படுத்தவும் .ஆர்.கே.சிங் அனைத்து அதிகாரிகளையும் அறிவுறுத்தினார்.
–திவாஹர்