போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பில் ஈடுப்பட்டு வரும் மோசடி கும்பல்!-நமது ‘UTL MEDIA’ சார்பில் தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பட்ட அதிரவைக்கும் ஆதாரங்கள்..!

கீழமுல்லக்குடி வருவாய் கிராமம் புல எண் 76 வரைபடம்.

கீழமுல்லக்குடி வருவாய் கிராமம் புல எண் 76அ’ பதிவேடு.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், திருச்சி டவுன் ஹால் 3-ம் எண் இணை சார்பதிவாளர் பத்திரபதிவு எல்லைக்குட்பட்ட கீழமுள்ளகுடி வருவாய்  கிராமம், காந்திபுரத்தில்  புல  எண்  76/2-ல் 1991 ஆம் ஆண்டு  ஜூலை 16 ஆம் தேதி கே.எம்.மூர்த்தி என்பவர், அதே ஊரைச் சேர்ந்த எம்.சிங்கராயர் என்பவருக்கு, மூன்று வருட காலத்திற்கு ரூ.3000/-க்கு ஈடு/ அடமான வைத்துள்ளதாக திருச்சி டவுன் ஹால் 3-ம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவாகியுள்ளது. ஆவண எண்: 1111/1991. அதில் முந்தைய ஆவண எண்: 1900 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் வில்லங்க சான்று தங்களின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளோம்.

மேற்படி ஆவண எண்  1111/1991-ல் குறிப்பிட்டுள்ளபடி, புல எண் 76/2 ல் அப்படி ஒரு இடமே இல்லை. கீழ்காணும் வருவாய் துறை ‘அ’ பதிவேடு மற்றும் வரைபட ஆவணங்களை பார்வையிட்டாலே இந்த உண்மை தங்களுக்கு புரியும்.

புல எண் 76/1-ல் உள்ள இடத்தை அபகரிப்பதற்காக, புல எண் 76 /1 ல் உள்ள நான்கெல்லையை, புல எண் 76 /2- ல் குறிப்பிட்டு மேற்படி கே.எம்.மூர்த்தியும், எம்.சிங்கராயரும் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆனால், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுப்பட்ட கே. எம்.மூர்த்தி தற்போது உயிரோடு இல்லை. ஆனால், கே. .எம் மூர்த்தியிடமிருந்து ஈடு /அடமானம் எழுதி வாங்கிய எம்.சிங்கராயர் என்பவர் தற்போது உயிரோடு இருக்கிறார். இந்நிலையில், கே.எம்.மூர்த்தி புல எண் 76/2-யை மோசடியாக பயன்படுத்தி செய்து கொடுத்த 1111/1991 என்ற ஆவணத்தை கையில் வைத்துக்கொண்டு புல எண் 76/1 -ல் உள்ள இடத்தை அபகரிப்பதற்கும், விற்பதற்கும் கீழமுல்லக்குடி ஊராட்சியில் குடிநீர் குழாய் பழுது பார்த்து வரும் ஊழியர் வளன்நகர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் தூண்டுதலின் பேரில், கே.எம்.மூர்த்தியின் மனைவி விஜயா, அவரது மகன் முரட்டுக்காளை என்கிற செந்தமிழ் செல்வன், மகள்கள் முத்தமிழ்செல்வி, தேன்தமிழ்செல்வி ஆகியோர் உள்பட சில சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து எம்.சிங்கராயர் தற்போது செயல்பட்டு வருகிறார்.

எனவே, புல எண் 76/2-யை மோசடியாக பயன்படுத்தி பத்திர பதிவு செய்யப்பட்டிருக்கும் 1111/1991 என்ற ஆவணத்தை ரத்து செய்து, அதற்கு காரணமாக இருந்த மோசடிப் பேர்வழிகள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், கே.எம்.மூர்த்தி என்பவர் உண்மையாலுமே கீழமுல்லக்குடி வருவாய் கிராமம் புல எண் 122/3-ல் உள்ள இடத்தில்தான் அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில் இறக்கும் வரை வாழ்ந்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதற்கான ஆதாரம்  தங்களின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளோம்.

இந்நிலையில், மேற்படி கே.எம்.மூர்த்தி இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி விஜயா என்பவர் 23.05.2008 அன்று, அவரது மகள் தேன்தமிழ்செல்வி என்பவருக்கு கீழமுல்லக்குடி வருவாய் கிராமம் புல எண் 76/2-யை மோசடியாக பயன்படுத்தி  “தான செட்டில்மெண்ட் பத்திரம்” ஒன்றை செய்துள்ளார். அது திருச்சி டவுன் ஹால் 3-ம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 1655/2008 ஆவணமாக பதிவாகியுள்ளது. சொத்தின் விஸ்தீர்ணம்: 1308 ச.அடி (121.51 ச.மீ) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. .முந்தைய ஆவண எண் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. அவற்றின் வில்லங்க சான்று தங்களின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளோம்.

மேற்படி ஆவண எண்  1655/2008 -ல் குறிப்பிட்டுள்ளபடி புல எண் 76/2 ல் அப்படி ஒரு இடமே இல்லை. கீழ்காணும் வருவாய் துறை ‘அ’ பதிவேடு மற்றும் வரைபட ஆவணங்களை பார்வையிட்டாலே இந்த உண்மை தங்களுக்கு புரியும். புல எண் 76/1-ல் உள்ள இடத்தை அபகரிப்பதற்காக புல எண் 76 /1 ல் உள்ள நான்கெல்லையை மேற்படி விஜயா அவரது மகள் தேன்தமிழ்செல்வி ஆகியோர் மோசடியாக பயன்படுத்தியுள்ளனர். 

எனவே, புல எண் 76/2-யை மோசடியாக பயன்படுத்தி பத்திர பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆவண எண்: 1655/2008 , ஆவண எண்:  1111/1991 ஆகிய மேற்படி இரண்டு பத்திரப் பதிவுகளையும் ரத்து செய்து அதற்கு காரணமாக இருந்த மோசடிப் பேர்வழிகள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

இது சம்பந்தமாக மேற்படி மோசடி கும்பல் மீது காவல்துறையில் பலமுறை எழுத்துப்பூர்வமாக நாம் புகார் அளித்து உள்ளோம். இந்நிலையில் கடந்த 06.05.2020, 07.05.2020 மற்றும் 05.06.2020 ஆகிய தேதிகளில் மீண்டும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கும், அப்போதைய திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், அப்போதைய
திருவெறும்பூர் காவல்நிலைய ஆய்வாளருக்கும் தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக நாம்
புகார் அளித்தின் பேரில், இந்த மோசடி பேர்வழிகளை காவல்துறையினர் மிக கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனாலும், இந்த மோசடி கும்பல் இன்றுவரை திருந்தவில்லை. மோசடி ஆவணம் தயாரிப்பது அதை வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பது; இதையே முக்கிய வேலையாகவும், முழு நேரத்தொழிலாகவும் இந்த மோசடி கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில்தான் காந்திபுரத்தைச் சேர்ந்த எம். சிங்கராயர் என்பவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் இந்த மோசடி கும்பலுடன் இணைந்துள்ளார்.

கீழமுல்லக்குடி ஊராட்சி ஊழியர் வளன்நகர் அலெக்ஸ்.

கீழமுல்லக்குடி ஊராட்சியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் வளன்நகர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் தூண்டுதலின் பேரில்தான், காந்திபுரத்தைச் சேர்ந்த எம். சிங்கராயர் பணத்திற்காக கூலிப்படையாக தற்போது மீண்டும் நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில்தான் இது சம்பந்தமான ஆதாரங்களை திரட்டி தமிழ்நாடு பத்திரப் பதிவு துறை அரசு செயலாளர், தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை ஐஜி, பத்திரப் பதிவுத்துறை டிஐஜி மற்றும் திருச்சி மாவட்ட பதிவாளர் மற்றும் திருச்சி டவுன் ஹால் 3-ம் எண் இணை சார்பதிவாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் (E-mail) மற்றும் விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவும் நமது ‘ UTL MEDIA’ சார்பில் எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

அதை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

இதற்கு தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.

tn.registration-dept_watermarked

கீழமுல்லக்குடி ஊராட்சி ஊழியர் வளன்நகர் அலெக்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல; நாடுமுழுவதும் போலிப் பட்டாக்கள் தயாரித்து ரூ.3000/- முதல் ரூ.50,000/- வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் திருச்சி மாவட்த்தில் புலக்கத்தில் இருக்கும் போலிப் பட்டாக்களுக்கும், போலி ஆவணக்களுக்கும் முக்கிய புரோக்கராக கீழமுல்லக்குடி ஊராட்சியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் வளன்நகர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் செயல்பட்டு வருகிறார். அலெக்ஸ்சின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து இவரை உரிய முறையில் விசாரித்தல் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை, பாலியல் தொழில், வழிபறி மற்றும் ஆடு, மாடு திருட்டு உள்பட இன்னும் பல அதிர வைக்கும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும். கீழமுல்லக்குடி ஊராட்சி ஊழியர் என்ற போர்வையில் பணத்திற்காக பல சட்ட விரோத செயல்களில் தொடர்ந்து இவர் ஈடுப்பட்டு வருகிறார்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply