அரசு நிலத்தை மீட்க கோரி மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் மனு!

ye1007P1சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு மனுநீதி முகாம். ஏற்காட்டு பெரியக்காடு கிராமத்தில் இன்று (10.07.2014) காலை நடைப்பெற்றது.

இதில் வருவாய் துறை, சமூக நலத்துறை, குழந்தகைள் நலத்துறை, தோட்டக் கலை, உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறைகளை பற்றிய தகவல்களையும், தங்கள் துறைகளை பற்றிய நலத்திட்ட உதவிகளை பற்றியும் தெரிவித்தனர்.

பின்னர் தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையத்தில் கிடைக்கும் சலுகைகளையும், அதை பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் பேசினார்.

பின்னர் பொதுமக்களுக்கு ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, பயிர் விதைகள், உரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முகாமில் பொது மக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

வி.ஏ.ஓ., குத்தகைக்கு விட்டதாக கூறப்படும் அரசு நிலம்

வி.ஏ.ஓ., குத்தகைக்கு விட்டதாக கூறப்படும் அரசு நிலம்

சிறப்பு மனுநீதி முகாமிற்கு பெரியக்காடு செல்லும் வழியில் செம்மநத்தம் எனும் இடத்தில் அந்த பகுதியில் உள்ள அரசு நிலம் 5 ஏக்கரை அந்த கிராமத்தின் வி.ஏ.ஓ.மாதேஸ்வரன் பண வசதி அதிகம் படைத்தவர்களுக்கு முறைகேடாக குத்தகைக்கு விட்டதாகவும், இதனால் தங்கள் பகுதிக்கு வரவேண்டிய மருத்துவமனை, உள்ளிட்ட பல நலதிட்டங்கள் கிடைக்காமலேயே போனதாகவும், தற்போது இங்கு கட்டவிருக்கும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கட்டிடமும் கட்ட முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவிப்பதாகவும், வள்ளுவர்நகர், பெரியக்காடு, செங்கலுத்துபாடி, சோலுர்,மங்களம், கடுமருத்துர், நார்த்தன்சேடு உள்ளிட் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து அரசு நிலத்தை மீட்க கோரி மனு கொடுத்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றார்.

இது குறித்து வி.ஏ.ஓ. மாதேஸ்வரனிடம் விபரம் கேட்டோம். இந்த இடத்தை தான் குத்தகைக்கு விடவில்லை எனவும், இந்த மனுகுறித்து தாசில்தார் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதன்படி நடக்கவிருப்பதாக கூறினார்.

-நவீன் குமார்.