மத்தியப் பிரதேசத்தில் ரூ.5722 கோடி மதிப்பிலான மொத்தம் 534 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு மத்திய இணையமைச்சர் ஜென்ரல் வி கே சிங், முதலமைச்சர் சிவ்ராஜ் சௌகான், மக்களவை முன்னாள் தலைவரும், பிஜேபி மூத்த தலைவருமான சுமித்ரா மகாஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த திட்டங்கள் யாத்ரீகர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எளிதாக போக்குவரத்து வசதி கிடைக்க வகை செய்யும் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு கட்கரி தெரிவித்தார். அருகே உள்ள உஜ்ஜயினி அருகே உள்ள வேளாண் சந்தைகளுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று அவர் கூறினார். உஜ்ஜயினி-தீவாஸ் தொழில்துறை சாலை மேம்படுத்தப்படும் என்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுமுகமான போக்குவரத்து தொடர்பு, விரைவான வளர்ச்சி, சிறந்த பாதுகாப்பு, அனைவருக்கும் வளம் ஆகியவற்றை உறுதிசெய்ய அடுத்த தலைமுறை கட்டமைப்புக்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று திரு நிதின் கட்கரி தெரிவித்தார்.
–எஸ்.சதிஸ் சர்மா