பல்கலைக்கழக வீதியா? பல்லைக்கழக வீதியா?

kilinotchi  boardஇலங்கை, கிளிநொச்சி பிரதேச சபையினால் அறிவியல் நகரில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் விவசாய பீடத்தின் வீதிக்கான பெயர்ப் பலகை எழுத்துப் பிழையுடன் காட்சியளிக்கின்றது.

வீதிப்பெயர்ப் பலகையில் ‘பல்கலைக்கழக வீதி” என பொறிக்கப்பட வேண்டியதை ‘பல்லைக்கழக வீதி” என எழுத்துப் பிழையுடன் பொறிக்கப்பட்டுள்ளது.

‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற தமிழறிஞர்கள் வாழ்ந்த இலங்கை தமிழ்மண்ணில், இன்று இதுப்போன்ற ‘தமிழ்க் கொலைகள்’ நடைப்பெற்று வருவது மனதுக்கு வருத்தமாக இருக்கின்றது.

-சி.கவிப்பாரதி.