நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர்!- சொல்வதற்கு ஒன்றுமில்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4, சேலம்.

நீதிபதி பொன் பாண்டியன்.

சேலம் மாநகரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4 ல் நீதிபதியாக பணி புரிந்து வரும் பொன் பாண்டியன் என்பவரை, நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள நீதிபதி அறையில் அவர் இருந்தபோது, அவரிடம் வேலைப் பார்க்கும் நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவர், தனது கையில் வைத்திருந்த கத்தியால் நீதிபதி பொன் பாண்டியனை குத்தியுள்ளார். இதில் நீதிபதி பொன் பாண்டியனின் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், நீதிபதி பொன் பாண்டியனின் அலறல் சப்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த நபர்கள், நீதிமன்ற ஊழியர் பிரகாஷ்யை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த நீதிபதி பொன் பாண்டியன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மார்பு பகுதியில் தையல் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நீதிபதி குமரகுரு, சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கத்திக்குத்து சம்பவதிற்கான உண்மையான காரணம் என்னவென்று இதுவரை முழுமையாக தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்த விரிவானத் தகவலை அறிவதற்காக சம்மந்தப்பட்ட ஹஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் என்பவரிடம் விபரம் கேட்டோம்.

இது நீதிபதி சம்மந்தப்பட்ட வழக்கு கிரைம் நம்பர் உள்பட இதுப்பற்றி நான் எதுவும் சொல்ல இயலாது என்று ஹஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் நம்மிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர் ஹஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை நாம் தொடர்பு கொண்டோம். காவல் உதவி ஆணையர், ஒரு வழக்கு சம்மந்தமாக நாமக்கல் சென்று இருக்கிறார். நீதிபதி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமான எந்த அறிக்கையும் ஹஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து எங்களுக்கு இன்னும் வரவில்லை என்று நம்மிடம் பேசிய காவல் அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்த விரிவானத் தகவலை அறிவதற்காக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா,I.P.S அவர்களை அவரது அலைபேசிக்கு நாம் பல முறை தொடர்பு கொண்டோம். அவரது அலைபேசி “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply