இலங்கையில் தற்போது தங்கத்தை விட அதிகமாக மதிக்கப்படும் ஒரு பொருளாக பச்சை மிளகாய் பெருமை பெற்றுள்ளது. தனியே சாப்பிட்டால் கண்ணீா் வரும் அளவிற்கு காரத்தைக் கொடுக்கும் இந்தப் பச்சை மிளகாயின் விலையைக் கேட்டாலே மக்கள் கண்ணில் கண்ணீா் வருகிறது.
இலங்கை, யாழ்ப்பாணத்தில் சில்லைறைக் கடைகளில் பச்சை மிளகாய் சற்றுப் பெரிதான ஒன்று 5 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது, ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவிற்கு விலை போகின்றது.
முட்டைப் பொரியலுக்கு அவசியமாக தேவைப்படும் இந்தப் பச்சை மிளகாப் பற்றாக்குறையால் முட்டைப் பொரியலை விரும்புகிறவா்கள் பொன் விலை கொடுத்தாவது இதை வாங்கிச் செல்கின்றார்கள்.
-எஸ்.சதிஸ் சர்மா.