பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாள் : தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மலர் தூவி மரியாதை!

pr150714aதமிழக அரசின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று (15.07.2014) கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலை இன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

சிலை அமைந்துள்ள பகுதியில் துணியால் கூடாரம் போடப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மேளதாளங்கள் இசைக்கப்பட்டன. பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்குக்கீழ் அவரது படம் வைக்கப்பட்டு இருந்தது.

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று காலை 11.45 மணிக்கு அங்கு வந்தார். பெருந்தலைவர் காமராஜரின் படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

-ஆர்.பிரியதர்ஷிணி.