சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி!

The President of India, Shri Ram Nath Kovind, in his message  on the eve of International Women’s Day, which is observed every year on March 8, has said :-

 “I extend warm greetings and best wishes to all women on International Women’s Day.

Today when the world is continuously changing, Indian women are making a significant impact in their personal & social lives as well in the national arena. They are also playing an important role in the development process of our country. It is important to empower our daughters to make them self-reliant. It would enable them to achieve their aspirations even while fulfilling their responsibilities vis-à-vis their family, society and nation.

This day is also an occasion to reiterate our resolve to ensure safety, dignity and prosperity of women. We must give our sisters and daughters opportunities to realize their potential and hence contribute in nation-building.”

xxxxxxxxxx

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

“சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உலகில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், இந்தியப் பெண்கள் தனிப்பட்ட முறையிலும் சமூகம் மற்றும் தேசிய அளவிலும் மகத்தான முறையில் செயலாற்றி வருகின்றனர். நமது நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் அவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அவர்கள் தற்சார்புடன் திகழ்வதற்கு அதிகாரம் அளிப்பது முக்கியமாகும். குடும்பம், சமூகம், நாட்டிற்கான கடமைகளை அவர்கள் நிறைவேற்றுவதற்கு இடையே, அவர்களது சுய விருப்பங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும்.

பெண்களி்ன் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வளமை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இந்த நாளில் நாம் உறுதியேற்க வேண்டும். சகோதரிகள் மற்றும் புதல்விகளின் திறமைகளை கண்டறிவதற்கு வாய்ப்புகளை அளிப்பதன் மூலம், அவர்கள் நாட்டைக் கட்டமைப்பதில் பங்கேற்க முடியும்”

doc20223722701

திவாஹர்

Leave a Reply