கடலுக்கு அடியில் கச்சேரி : அமெரிக்காவில் நடந்த அதிசயம்!

sea musicஅமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் நீர் மூழ்கியாளர்களும், ஸ்நோக்கிள்ஸ் அணிந்த நீச்சலாளர்களும், கடலுக்கு அடியில் கச்சேரி நடத்தியுள்ளனர். இந்த இசைக் கச்சேரி நிகழ்வு இடைவேளை இன்றி 4-மணி நேரங்கள் வரை நடைப்பெற்றுள்ளது. இந்த இசைக் கச்சேரியில் சுமார் 500 பேர் கலந்துக் கொண்டனர்.

50-அடி ஆழ நீருக்கடியில் இசை மிகவும் தெளிவாகவும், நுட்பமாகவும் இருந்ததாகவும், நீருக்கடியில் சூரிய கதிர்களின் நிழல்களை தெளிவாக பார்க்க முடிந்தது என்றும் இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

-ஆர்.மார்ஷல்.