ஆபத்தான கிணறு, அச்சத்தில் மக்கள்!

well

ஏற்காடு நகரம், முருகன் நகர் பகுதியில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் கிணறு ஒன்று ஏற்காடு பஞ்சாயத்து நிர்வாகத்தால் தோண்டப்பட்டது. இந்த கிணற்றில் இருந்துதான் முருகன் நகர் பகுதி முழுவதும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது

இந்த கிணற்றுக்கு மறுபுறம் 20-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த கிணற்றை தாண்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

ஆனால், இந்த கிணறு தடுப்பு சுவர் கட்டப்படாமல் தரைமட்டத்திற்கே மரங்களை கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இந்த மரங்களின் மீது பயத்துடன் நடந்து சென்று இந்த பகுதியை கடக்கின்றனர்.

இந்த மர சந்துகளில் அவ்வப்போது நாய் உள்ளிட்ட விலங்குகள் விழுந்து இறந்து தண்ணீரை மாசுப்படுத்துகின்றன. மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இந்த கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

-நவீன் குமார்.