பிரதமரின் விரைவு சக்தி தொலைநோக்குக்கு ஏற்ப, ரயில்வே அமைச்சகம் “விரைவு சக்தி பன்நோக்கு சரக்கு முனைய”த்தை அசன்சால் டிவிஷனில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. தாபர்நகர் என்னுமிடத்தில் மைதான் பவர் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனம் இந்த முனையத்தை இயக்கும். விரைவு சக்தியின் சரக்கு முனையமாக இது அமைந்துள்ளது.
மின் திட்டங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி இதுவரை சாலை வழியாகவே கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்த சரக்கு முனையத்தின் மூலம் ரயில்வேயின் வருமானம் மாதத்திற்கு சுமார் ரூ.11 கோடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி கே திரிபாதி, ரயில்வே மூலம் சரக்குப் போக்குவரத்து நடைபெறுவது பொருளாதாரத்திற்கு பலனளிக்கும் என்று கூறினார்.
–திவாஹர்