விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக என்எம்ஐசி வளாகத்தில் பழங்காலக் கார்கள் மற்றும் பைக் கண்காட்சி.

மும்பை பிலிம் டிவிஷன் வளாகத்தில் அமைந்துள்ள இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியக வளாகத்தில் மிகவும் பழைய கார்கள் மற்றும் பைக்குகள் கண்காட்சி நடைபெற்றது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய பழமையான கார் கிளப்-உடன் இணைந்து என்எம்ஐசி இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக்கண்காட்சி பற்றி குறிப்பிட்ட தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் நீர்ஜா சேகர், மிகப்பழமையான 75 கார்கள் மற்றும் பைக்குகள் இதில் கலந்து கொண்டதாகக் கூறினார். நமக்கு முந்தைய தலைமுறையினர் விடுதலைக்காக எத்தகைய போராட்டங்களை நடத்தி, தியாகங்களைப் புரிந்துள்ளனர் என்பதை தற்போதைய தலைமுறையினருக்கு நினைவுபடுத்தும் நிகழ்ச்சி இது என்று கூறினார்.

நடிகர்கள் அக்சய் குமார், கிரித்தி சனோன் ஆகியோர் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்.

Leave a Reply