கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்!-மாணவர்கள் சீருடையை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்!-கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புரையின் உண்மை நகல்.

THE HON’BLE MR. RITU RAJ AWASTHI, CHIEF JUSTICE.

THE HON’BLE MR.JUSTICE KRISHNA S. DIXIT.

THE HON’BLE MS. JUSTICE J. M. KHAZI.

கர்நாடகா மாநில கல்வி நிலையங்களில் ‘ஹிஜாப்’ அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக, உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்ஷித், ஜே.எம்.காஷி அடங்கிய அமர்வு விசாரித்தது.

மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கியும் வாதிட்டனர்.

உடுப்பி பி.யு. கல்லூரி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த் வாதிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (15/03/2022) காலை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியாவசிய பழக்கம் இல்லை. ஆகையால், கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வர தடை விதித்து பிப்ரவரி 5, 2022 ல் விதிக்கப்பட்ட தடை செல்லும்.

பள்ளிச் சீருடை என்பது சட்டபூர்வமானதே. அது பேச்சு உரிமை, தனிநபர் உரிமை என அரசியல் சாசன உரிமைகள் எதையும் பறிப்பதாகாது. பிப்ரவரி 5,,2002ல் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்.

இவ்விசியத்தில் உடுப்பி அரசு பியு கல்லூரி நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முகாந்திரம் இல்லை.

எனவே, ஹிஜாப் தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ப்படுகிறது.

இவ்வாறு அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு அளித்த அந்த தீர்ப்புரையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக முழுமையாக இங்கு பதிவு செய்துள்ளோம்.

WP2347-2022_watermarked

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு, கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/02/16/68388/

Leave a Reply